வருகிற பொங்கலுக்கு தல - TopicsExpress



          

வருகிற பொங்கலுக்கு தல அஜீத் தனது வீரத்தை சர்க்கரை பொங்கலாக பரிமாறப்போகிறார். அதற்கான ஒரு சிறிய முன்னோட்டம் இது... *அஜீத் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட் *எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை மாதிரியும், ரஜினியின் முரட்டுக்காளை மாதிரியும் செண்டிமெண்ட் கம் ஆக்ஷன் மூவி. *படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் வினாயகம். *அஜீத்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள். *அஜீத்தை அத்தான்... அத்தான்... என்று துரத்தி துரத்தி காதலிக்கும ் வில்லேஜ் குலாப் ஜாமூன் தமன்னா. *சந்தானம், அப்புக்குட்டி, வித்யூலேகா ராமன், கிரேன் மனோகர், மயில்சாமி, இளவரசு, இவர்களுடன் அஜீத் அடிக்கும் காமெடி லூட்டிகள் சிரிப்பு பொங்கல்தான். முதன் முறையாக அஜீத் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம். *நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். *வேட்டிய கால் வரைக்கும் அவிழ்த்து விட்டிருந்தால் தல சாந்தமாக இருக்கார்னு அர்த்தம். வேட்டிய மடிச்சு கட்டிட்டார்னா அதகளம்தான ். *கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு களைகட்டும். *தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் பட்டைய கிளப்பும். *உள்ளூர் மண்மணக்கும் பாட்டும் உண்டு. சுவிட்சர்லாந்து பனிமலை பின்னண ியில் அழகா டூயட்டும் உண்டு. *படத்தில் நோ பன்ஞ் டயலாக். ஆனா காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ஞ் டயலாக் எபெக்டுல இருக்கும். *ஷூட்டிங் அனைத்தும் முடிந்து, பின்னணி இசை கோர்ப்பு, கிராபிக்ஸ், கலர் கரெக்ஷன், டப்பிங், எட்டிட்டிங் என வீரத்துக்கு அழகு சேர்க்கும் பணிகள் வேகமா நடந்துக்கிட்டிருக்கு. *சோறு சாம்பாரு, ரசம், தயிர்னு வெஜ் அயிட்டமும் உண்டு, வெடக்கோழி குழம்பு, வஞ்சிரம் மீனு, மட்டன் மசாலா, ரத்த பொறியல்னு நான் வெஜ் அயிட்டமும் உண்டு. தல வைக்கும் பொங்கல் விருந்தை சாப்பிட தயாரா
Posted on: Thu, 21 Nov 2013 16:33:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015